பதிவு செய்த நாள் - September 17, 2012 2:25 pm
சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 35 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதில், 2 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 12 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியர்கள் அனைவரும் நாசர் அல் ஹாஜிரி நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் கேரளாவைச் சேர்ந்த ரவி பிள்ளை என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
Comments
Post a Comment