26-ந் தேதி முதல் அமல் வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை டெலிவிஷன்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் டெலிவிஷன்களுக்கு 35 சதவீதம் சுங்கவரியும்...
Welcome to AI Trends Today, your premier source for the latest developments in artificial intelligence!