நாட்டின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஜே எம் லிண்டோக், முன்னாள் ராணுவ தளபதி வி கே சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு விடுத்த நிலையில், இதுகுறித்து அன்னா குழு உறுப்பினர் பிரசாந்த் பூசன், போராட்டத்தை கைவிட்டுவிடலாமா என்று மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா, ஊழல் அமைச்சர்கள் மீது சிறப்பு விசாரணைக்குழு, ஊழல் எம்.பி,.க்களுக்கு அதிவிரைவு கோர்ட் மூலம் உடனடி தண்டனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னா ஹசாரேவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா மற்றும் கோபால் ராய் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 9வது நாளை எட்டியுள்ளது.
கெஜ்ரிவால் உள்ளிட்ட மூவரது உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டதாகவும், அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் நடவடிக்கைகளில் டில்லி போலீஸ் களமிறங்கியுள்ளது. இதற்கு ஹசாரே மற்றும் அன்னா குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசியல் அவதாரமா? : இந்நிலையில், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள வாசகம், அன்னா ஹசாரே குழு அரசியல் அவதாரம் எடுக்க உள்ளதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள அன்னா ஹசாரேவில் சிறந்த அரசியல் போட்டியாக செயல்பட முடியுமா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சரியான போட்டியாக அன்னா ஹசாரே தலைமையிலான கட்சி செயல்படுமா? மற்றும் தற்போதுள்ள கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்விகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
எதுவரை போராட்டம் : கிரண்பேடி : அன்னா ஹசாரே குழுவினர், அரசியல் கட்சியாக உருவெடுக்குமேயானால், அது லோக்சபா தேர்தலுடன் தனது பணியை (போராட்டத்தை) நிறுத்திக்கொள்ளாமல், உரிய தகுதிகளுடன் கூடிய, ஊழல் புகாரில் சிக்காத மக்கள் ஆட்சிக்கு வரும் வரை தங்களது போராட்டம் தொடரும், இது அன்னா ஹசாரேவின் ஆசிர்வாதத்தால் விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அவர் கூறினார்.

Comments
Post a Comment